இரண்டு நாளில் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அருகே மலை அடிவாரத்தில் வெள்ளேரி என்ற கிராமம் உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு கரடி நரி காட்டுப்பன்றி போன்றவை வீட்டின் அருகே வராமல் இருக்கவும் வீட்டின் செல்ல பிராணியாக நாய்களை மக்கள் வளர்த்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த இரண்டு நாளில் சுமார் 35-க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. மேலும் மலையை ஒட்டியுள்ள பகுதியில் நாய்கள் இறந்துள்ளதால் கோழிப்பன்னைகளில் இறந்துபோகும் கோழிகளை விஷம் தடவி அதைகொண்டு வந்து மலை ஓரத்தில் அவர்கள் போட்டு செல்வதால் நாய்கள் இறப்பதாக கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நாய்கள் இறப்புக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.