சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஷாலினி

2018-07-17 2

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் அங்கையர்கரசி என்பவர் சென்னையில் பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரை பார்க்க அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் ஷாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல், பிரபுராஜ் ஆகியோர் பள்ளபட்டி வந்து சந்தித்து விட்டு காரில் சென்னை திரும்பியுள்ளனர். திண்டுக்கல் பொட்டிகுளம் அருகில் வந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து இடது புற பள்ளத்தில் விழுந்து இருக்கிறது. அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஷாலினி என்ற பெண் செய்தியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அம்மைய நாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஷாலினி தனது பிறந்த நாள் அன்றே விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ஊடக நண்பர்கள், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires