மதுரையில் பாண்டிகோவிலில் நடைபெற்ற அதிமுக அரசின் சாதனை சைக்கிள் பேரணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றிபிரச்சாரத்தினை தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். கட்சி வலிமைபெற ஒற்றுமை அவசியம் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தினகரன், அதிமுகவுக்காக உழைத்தவரா? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பினார். திமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன், ஆட்சியை பிடிக்க துடிக்கும் துரோகி என கடுமையாக சாடினார். ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவுகளை தூள் தூளாக்கி விட்டதாக தெரிவித்த அவர், கட்சியை உடைக்க நினைத்தவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஒற்றுமையாக நிற்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV