பனாமா பேப்பர்ஸ் ஊழல் பணத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் சொகுசு வீடுகள் வாங்கியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 74 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நவாஸ் ஷெரிப், மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோரும் நீதிமன்றத்தால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், மனைவியின் புற்றுநோய், சிகிச்சைக்காக லண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் மரியம் ஆகியோர் அபுதாபி வழியாக நேற்றிரவு லாகூருக்கு வந்தனர். இதையடுத்து லாகூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நவாஷ் ஷெரீப் மற்றும் மரியம் ஹெலிகாப்டர் மூலம், இஸ்லாமாபாத்திலுள்ள அதியாலா சிறையில் அடைத்தனர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஷ் கட்சி தலைவர்கள் பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கலவரங்களை முன்னெடுப்பார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV