தென்கொரியாவை சேர்ந்த சாம்சங்க் நிறுவனம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆலை விரிவாக்கத்திற்காக 4 ஆயிரத்து 915 கோடி ரூபாய் ஒதுக்கியது. தற்போது நொய்டாவில் செயல்படும் நிறுவனத்தில், ஆண்டிற்கு 67 மில்லியன் மொபைல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ஆண்டிற்கு120 மில்லியன் மொபைல்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, புதிய தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே கலந்து கொண்டு ஆலையை தொடங்கி வைத்தனர். இது உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நேரடி கொள்முதல் முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதாகவும், அரசுக்கு தேவையான பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார். இதற்கிடையே பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோர் மெட்ரோ ரெயிலில் நொய்டாவுக்கு பயணம் மேற்கொண்டனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV