CBSE பள்ளிகளில் 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்க கூடாது - உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்

2018-07-17 2

CBSE பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்க கூடாதென உத்தரவிட்டு, இந்த உத்தரவை அனைத்தும் மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படியும், அது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை, மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரல் தாக்கல் செய்தார். மேலும் மாநில அரசுகளின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது CBSE தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவு குறித்து இதுவரை எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்றும் 2 வாரங்களில் அனுப்பப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருபாகரன், இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires