இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுதலை செய்ய வேண்டும் - ராமேஸ்வரம் மீனவர்கள்

2018-07-17 0

கடந்த ஒரு வார காலத்தில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் 3 விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில்; ஆலோசனைக்கூட்டம் நடத்தினர் இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளை விடுவிக்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வசமுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் இராமநாதபுரம், புதுக்கோட்டை,தூத்துக்குடி,தஞ்சை வேதாரணயம் உள்ளிட்ட ஜந்துமாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவஅமைப்புகள் தெரிவித்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires