தொழில் நஷ்டம் காரணமாக தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

2018-07-17 1

திருப்பூர் அருகேயுள்ள பாளையக்காடு காயத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நூல் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. வெளி வியாபாரிகள் அண்ணாமலைக்கு கொடுக்க வேண்டிய சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் அண்ணாமலை கொடுக்க வேண்டியவர்களுக்கு சரியான நேரத்தில் பணத்தை கொடுக்க முடியாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து நூல் குடோனுக்கு சென்று பார்த்த போது, அவர் அங்கு தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires