துருக்கி நாட்டில் மெர்சின் நகரில் ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டி நடைபெற்றது, இதில் இந்தியாவின் தீபா கர்மாகர் 14.150 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். இவர், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பைனலில், நூலிழையில் பதக்கத்தை தவற விட்டு 4ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தங்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வென்ற தீபா கர்மாகரால், இந்தியா பெருமை கொள்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வெற்றி அவரது விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் பாராட்டு தெரிவித்துள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV