தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் இன்று திறக்கப்படவில்லை. தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 33 ஆயிரம் கடைகள், கூட்டுறவு துறை மூலமும், 2 ஆயிரம் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படுகின்றன. இதனிடையே ரேஷன் கடை ஊழியர்கள் கூட்டுறவுத் துறை கடை ஊழியர்களுக்கு, நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம், உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகின்றனர். இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர்கள், திட்டமிட்டபடி, இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இன்று இயங்கவில்லை
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV