இந்திய அரசின் குடியரசுத் துணை தலைவராகப் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக வெங்கய்யா நாயுடு புதுச்சேரி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புதுச்சேரி பல்கலைகழகம் வந்த அவர், ஜவஹர்லால் நேரு கலையரங்கில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அபபோது, அனைவரும் அவரவர் கடமையை செய்தால் இன்னும் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முதலிடத்தை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ள வேண்டாம் என இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தினார். இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, துணைவேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV