ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் கார் மற்றும் சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் கொள்ளை

2018-07-17 2

ஈத்தாமொழி அருகே தெற்கு பணிக்கன் குடியிருப்பை சந்தவர் தியாகராஜன். ஓய்வு பெற்ற விமானபடை அதிகாரியான இவர் தனது மனைவியுடன் கடந்த 5-ம் தேதி வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார், மோப்பநாய் உதவியுடன், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires