சமூகத்தில் பின்தங்கி உள்ள எளிய மக்களுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு முதல் இந்த உணவு திருவிழா நடந்தது. இந்நிலையில் 2ம் ஆண்டாக இத்திருவிழா நடைபெற்றது. இத்திருவிழவை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், 55க்கும் மேற்பட்ட ஓட்டல், காபி ஷாப், ஐஸ்கிரிம் கடைகள், நட்சத்திர ஓட்டல் ஆகியவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தனியார் அமைப்பினர் பல்வேறு அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஏழை மாணவர்களுக்கு பாடபுத்தகம் அளிக்க முடிவு செய்துள்ளனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV