கடந்த வாரம் சட்டமன்றத்தில் நடைபெற்ற போக்குவரத்து கழக மானிய கோரிக்கையின் போது புதிய மற்றும் சொகுசு பேருந்துகளை அறிமுகம் செய்வதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்திற்கு 47 பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் முதற்கட்டமாக திருப்பூரில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு இயங்ககூடிய வகையில் 11 பேருந்துகளை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர். மாநகர காவல் ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV