கர்நாடகாவில் மஜத மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமி புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுத்ததற்கு, முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நேரடி அனுமதி பெற்று, குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் சித்தராமையா திடீரென பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இதில் பங்கேற்குமாறு காங்கிரஸை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி சித்தராமையாவின் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தார். துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி. பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், சித்தராமையாவின் விருந்து தேவையற்றது என கருத்து தெரிவித்தனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சித்தராமையா திடீரென விருந்து வழங்கியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV