சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய தவித்தனர். இந்நிலையில் கிச்சிப்பாளையம் பகுதியில் முகமது ஆசாத் என்ற சிறுவன் அங்குள்ள கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்தான். பின்னர் அவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் தேடும் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் ரோகினி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV