ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம், ஜெயலலிதாவின் உறவினர்கள், போயஸ் தோட்டத்தில் பணி புரிந்தவர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் மற்றும் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோரை மறுவிசாரணைக்காக இன்று ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதனடிப்படையில், பூங்குன்றன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இவர்கள் இருவரும், ஏற்கனவே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திலும், சசிகலா தரப்பினர் மேற்கொண்டு வரும் குறுக்கு விசாரணையிலும் ஆஜராகி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV