காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர், 4 மாநில பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்திற்கு இந்த மாதம் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு177.25 டி.எம்.சி நீரை மாதந்தோறும் படிப்படியாக வழங்க, ஆணையம் உத்தரவிடும் என்றும் முதல்வர் கூறினார். வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் என காவிரி ஆணைய தலைவரே கூறியுள்ளார் என்றும் முதல்வர் சுட்டிக்காட்டினார். ஆகஸ்டுக்கு 45.9 டிஎம்சி, செப்டம்பருக்கு 36.76 டிஎம்சி காவிரி நிரை கர்நாடகா தர வேண்டும் என தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV