சீனாவின் திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் - மானசரோவருக்கு இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரைக்கு சென்றனர். யாத்திரையை முடித்து திரும்பும் போது நேபாளத்தில் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை இயக்கமுடியாமலும், வாகனங்களை சென்றடைய முடியாமலும் சென்னையை சேர்ந்த19 பேர் உட்பட தமிழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் என சுமார் ஆயிரத்து 500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கை ஏற்று நேபாளம் அரசு இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 150 இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV