அஸர்பைஜான் நாட்டில் தாழ்வாகப் பறந்து சென்ற ஹெலிகாப்டரின் தாக்குதலில் இருந்து பெண் செய்தியாளர் ஒருவர் தப்பினார். தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக எல்மைரா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அஸர்பைஜான் நாட்டு விமானப்படையின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டு வந்தார். விமான ஓடுதளத்தில் நின்றவாறு அவர் செய்தி கொடுத்துக் கொண்டிருந்தபோது, ஹெலிகாப்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அசுர வேகத்தில் பறந்து சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டர் எல்மைராவின் தலையிலிருந்து ஒரு அடிக்கும் குறைவான தூரத்தில் கடந்து சென்றது. இதனால் அவர் பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV