18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இருவேறு தீர்ப்பை வழங்கியது. இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும், கடந்த மாதம் ஜூன்14-ஆம் தேதி தீர்ப்பளித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி எஸ்.விமலா விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தான் விசாரிக்கும் என திட்டவட்டமாக தெரிவித்ததுடன், அதை விசாரிக்க நீதிபதி சத்தியநாராயணனை நியமித்தும் உத்தரவிட்டது. இந்நிலையில் மூன்று நாட்களாக இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படாததால், டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சார்பில் விரைந்து வழக்கை பட்டியலிட வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் சக்திவேலிடம் கடிதம் கொடுத்துள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV