சென்னை திருவான்மியூரை சேர்ந்த ரமா என்ற பெண்மணியும், புதுச்சேரியை சேர்ந்த சபரிநாதன் என்பவரும் இணைந்து அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்று கூறி 25-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி ரமா, சபரிநாதன் மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளனர். மேலும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை முழுவதுமாக பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV