சென்னை, மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 15 சதவீதம் வழங்க வலியுறுத்தியும், ஊழியர்களுக்கான 35 சதவீத சலுகையில், இதுவரை 1 சதவீத சலுகை கூட வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 15 சதவீத அடிப்படை ஊதியம் வழங்க வேண்டிய நிலையில்,10 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மேலும், 5 வருடமாக பணி உயர்வு, ஊதிய உயர்வு என எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அதிகாரிகள் தங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV