மஹாராஷ்டிராவில் குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் பெற்றொர்கள் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளும் படி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் துலே மாவட்டம், சக்ரி தாலுகாவுக்குட்பட்ட ரெயின்படா கிராமத்திற்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்ததாக தெரிகிறது. இதனை கண்ட கிராமமக்கள் சிலர், அவர்கள் சிறுமியை கடத்த முயற்சிப்பதாக கருதி கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு நடைபெற்ற வாரச்சந்தையில் கூடியிருந்த பொதுமக்கள் மர்மநபர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் 5 பேர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில், இது தொடர்பாக 23 பேரை கைது செய்துள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV