ஜி எஸ் டி வரி விதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு கோவையில் ஜி எஸ் டி வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையின் ஜி எஸ் டி மற்றும் மத்திய கலால் துறையினர் ஆணையாளர் சீனிவாச ராவ் கலந்து கொண்டார். மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில்துறையினர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவையின் ஜி எஸ் டி ஆணையாளர் சிரீனிவாசன் ராவ், கோவை மண்டலத்தில் ஜி எஸ் டி வரி விதிக்கப்பட்ட பிறகு 18% வரி வருவாய் அதிகரித்து உள்ளதாகவும், மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த வரி வசூலில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வரி செலுத்தாதவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஜி எஸ் டி வரி செலுத்துவது தொடர்பாக தொழில் துறையினருக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் கூறினார். மேலும் சிறு குறு தொழில் துறையினருக்கு ஜி எஸ் டி குறித்த சட்டங்களை பின்பற்றுவதில் சிக்கல்கள் இருந்துவருவதாகவும், இருப்பினும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறினார். ஜி எஸ் டி வரி விதிப்பிற்கு பிறகு கோவை மண்டலத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்துவதில் இணைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV