உலகக் கால்பந்து நாக் அவுட் போட்டிகள், யார் யாருடன் மோதுகிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்

2018-07-17 0

முதல் நாக் அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு கசன் அரங்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இன்று இரவு 11.30 மணிக்கு ஃபிஸ்ட் ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் உருகுவே, போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன. ரொனால்டோ ஆடும் ஆட்டம் என்பதால் அவரின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் ஸ்பெயின், ரஷ்யா மோதுகின்றன.அன்று இரவு 7.30 மணிக்கு லுஸ்நிக்கி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஞாயிறு இரவு 11.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா, டென்மார்க் அணிகள் நொவ்கரொட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. திங்கட்கிழமை சமரா அரங்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பிரேசில், மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. அன்றைய தினம் நடைபெறும் மற்றொரு போட்டியில் பெல்ஜியம், ஜப்பான் அணிகள் ரொஸ்டொவ் அரங்கத்தில் மோதுகின்றன. ஆசியாவில் இருந்து தகுதி பெற்ற ஒரே நாடு என்பதால் ஆசிய கால்பந்து ரசிகர்களின் கவனம் ஜப்பான் பக்கம் திரும்பியிருக்கிறது. இந்நிலையில், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கின்றன. கடைசி நாக் அவுட் ஆட்டம் ஸ்பார்டக் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் கொலம்பியா, இங்கிலாந்து அணிகள் மோதிகின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires