இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ், அடுத்த மாதம் 16ம் தேதி பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரத்தில் இருநாட்டு அதிபர்களும் சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார். அந்த உச்சி மாநாட்டில் இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் கூட்டு அறிக்கை வெளியிடுவார்கள் எனவும் தெரிவித்தார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV