8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், சென்னையில் வைத்து கடந்த 17ம் தேதி கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஜாமீன் வழங்கியதை அடுத்து நேற்று மாலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், தீவிரவாதியை கைது செய்தது போல் தன்னை கைது செய்தனர் என்றும், நோட்டீஸ் கொடுத்து இருந்தால் தானே விளக்கம் கொடுத்திருப்பேன் எனவும் தெரிவித்தார். 8 வழிச்சாலையால் எந்தவகையில் பசுமை புரட்சி ஏற்படும் என்றும், எத்தனை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெளிவுபடுத்த வேண்டும் என்றார். 8 வழிச்சாலை அமைந்தால் நன்மை என்றால், அந்த சாலை அமைக்க தானே கல், மண் சுமப்பேன் என தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது 8 வழிசாலை குறித்து சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் வரும் முத்துமணி மாலை பாடல் போன்று மன்சூர் அலிகான் பாடிகாட்டினார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV