திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடை ஒன்றிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சிலர் வாங்கி வருவதை கண்டு அந்த மளிகை கடை உரிமையாளரின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருட்களை பதுக்கிய வீட்டின் உரிமையாளர் முருகன் மற்றும் சங்கர் ஆகிய இருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV