பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது

2018-07-17 0

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்க்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேரில் 1லட்சத்து 4 ஆயிரத்து 453 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 875 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கட் ஆஃப் மதிப்பெண்ணை பொறுத்தவரை10 பேர் 200 க்கு 200 பெற்றுள்ளனர். கீர்த்தனா ரவி முதலிடத்தையும், ரித்வீக், ஸ்ரீ வர்ஷினி ஆகியோர் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தை பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் தவறிருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும் நடப்பாண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires