மருத்துப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை விஜயபாஸ்கர் வெளியிட்டார்

2018-07-17 0

எம்.பி.பி.எஸ். ; பி.டி.எஸ் போன்ற மருத்துவப்படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற சென்னை தாம்பரத்தை சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். தருமபுரி மாணவர் ராஜ்செந்தூர் அபிஷேக் 2 ஆம் இடத்தையும், செனைனயை சேர்ந்த பிரவீன் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் மொத்தம் 25 ஆயிரத்து 417 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவில் 28 ஆயிரத்து 67 விண்ணப்பங்களும், மாநில ஒதுக்கீட்டு பிரிவில் 21 ஆயிரத்து 204 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 7 இடமும், பி.டி.எஸ் படிப்பில் ஒரு இடமும் அதிகரித்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களக்கு 10 எம்.பி.பி.எஸ், 1 பிடிஎஸ் இடமும் அதிகரித்துள்ளது. எம்.பி.பி.எஸ் படிப்பில் 3 ஆயிரத்து 393 இடங்களும், பி.டி.எஸ் படிப்பில் ஆயிரத்து 198 இடங்களும் உள்ளன. மருத்துவப்படிப்பிற்கு சி.பி.ஸ்.இ மாணவர்கள் 5 ஆயித்து 449 பேரும், ஐ.சி.எஸ்.இ மாணவர்கள் 650 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப்படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires