விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி, இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசனத்திற்காக இன்று முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி பொறுப்பு ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் இணைந்து அணையை திறந்து வைத்தனர். இன்று முதல் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும். இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் ஜூன் மாதம் வைகை அணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV