பயணிகளுக்கு தொந்தரவு தந்தால் கடும் நடவடிக்கை - கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

2018-07-17 0

சில தினங்களுக்கு மாநகர பேருந்தின் உள்ளேயும், பேருந்தின் கூரை மீது ஏறிக்கொண்டு ஆட்டம் போட்டனர். சில மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு, பேருந்தின் முன்னால் வழிமறித்து அச்சுறுத்தியவாறே சென்றனர். பேருந்தினுள் அமர்ந்திருந்த பயணிகளுக்கும் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்களுக்கும் இடையூறு செய்தனர். பேருந்தில் இருந்த சில பயணிகளையும் மாணவர்கள் தாக்கினர். இது தொடர்பாக, 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து தடையை மீறி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பேருந்தில் பயணிகளுக்கு எந்த வகையிலாவது தொந்தரவு செய்யும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires