அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபரான பின்னர், அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினார். ஆட்சிக்கு வந்ததுமே அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை முன்னெடுத்தார். இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டார். ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டது. டொனால்டு டிரம்ப் அரசின் இம்முடிவிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. இவ்வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளனர். இஸ்லாமியர்கள் மீது பேதம் காட்டும் செயல் என்ற எதிர்ப்புகளை நீதிமன்றம் நிராகரித்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு மீது அரசு காட்டிய அக்கறையை சுட்டிகாட்டியது. இதனையடுத்து 8 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் அமலுக்கு வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்றுள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV