B.E கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாகவும் ஏற்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

2018-07-17 1

இந்த ஆண்டுக்கான B.E படிப்பிற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆன்-லைன் மூலம் நடத்துகிறது. B.E படிப்பிற்காக விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, B.E படிப்புக்கான சேர்க்கை பணிகள் ஆன்லைன் மூலம் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, B.E படிப்பிற்கான கலந்தாய்வு கட்டணத்தை டிடி மூலமாகவும் ஏற்க வேண்டும் என அண்ணா பல்கலைகழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்ப பதிவின் போது எந்த முறை கடைபிடிக்கப்பட்டதோ, அதையே பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பிஇ கலந்தாய்வு கட்டணத்தையும் டி.டி.யாக செலுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires