தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி முடிவடைந்துள்ளதாக தகவல்

2018-07-17 0

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கடந்த 18-ந் தேதி முதல் நடைபெற்று வந்த அகற்றும் பணி நேற்று இரவு நிறைவடைந்தது. இதில் மொத்தம் 94 டேங்கர் லாரிகள் மூலம் 2 ஆயிரத்து 124 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires