550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், 52.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்மூலம் துருக்கியின் அதிபராக எர்டோகன் தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற எர்டோகனுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, துருக்கி மற்றும் ரஷியா இடையிலான இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV