திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுடன் நடிப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகர்களுக்கு, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்ற நடிகர் விஜய், இனி சிகரெட் பிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் விஜய் நடித்து வெளியாகும் சர்கார் என்னும் திரைப்படம் First Look Photo நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகர் விஜய் கருப்பு நிற சிகரெட்டுடன் காட்சி அளிக்கிறார்,. சிகரெட் பிடிப்பது போல் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு, சிகரெட்டுடன் இருப்பது போன்ற காட்சி சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு கண்டனம் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் இந்த செயல் வெட்கப்படும் அளவிற்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV