கோவாவில் சுற்றுலா பயணிகள் ’செல்பி ‘ எடுக்க தடை

2018-07-17 2

பனாஜி, கோவா மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணியர், செல்பி எடுப்பதை தடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கடற்கரைகள் அதிகமுள்ள கோவாவுக்கு, ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்நிலையில் அங்கு நீச்சல் மற்றும் ஆபத்தான நீர் சாகசங்களில் ஈடுபடுகையில், செல்பி படம் எடுக்கும் போது, உயிரிழப்பு ஏற்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதன் காரணமாக சுற்றுலா பயணியர், செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பி எடுப்பதை தடுக்க, கடல் பகுதிகளில், தனியார் நிறுவன பாதுகாப்பு வீரர்களை, மாநில அரசு நியமித்துள்ளது. காலை முதல் மாலை வரை, கடல் பகுதியில் ரோந்து வரும் பாதுகாப்பு வீரர்கள், செல்பி எடுப்போரை தடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires