இந்து மதம் மட்டுமின்றி எந்த வழிபாட்டு தலங்களிலும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை அனுமதிக்க கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களுடன் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வந்த போது ரங்கநாதருக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது, ரங்கநாயகி கோவிலில் குங்கும பிரசாதம் நெற்றியில் பூசியதை அவர் அழித்துள்ளார். இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்று குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதிகள் விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காமராஜர், பசும்பொன்தேவர், கட்டபொம்மன், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடிக்கப்பட்டு அபாயம் ஏற்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV