ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பத்திரிகையாளர், சுஜாத் புஹாரி கொலை சம்பவம் போன்று தொடராமல் இருக்க, பத்திரிகை துறையினர் ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என, அம்மாநில முன்னாள் அமைச்சர், சவுத்ரி லால் சிங் எச்சரித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில், முன்னாள் முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி அரசில், அமைச்சராக இருந்தவர், சவுத்ரி லால் சிங். கத்வா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் காஷ்மீர் பத்திரிகையாளர்கள், தவறான சூழலை ஏற்படுத்துகின்றனர் என்றும் பத்திரிகை துறையில், ஒரு எல்லையை ஏற்படுத்தி, வரம்புக்குள் செயல்பட்டால், மாநிலத்தில் சகோதரத்துவம் பாதுகாக்கப்படும். இல்லாவிடில், சுஜாத் புஹாரி கொலை போன்ற சம்பவத்தை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV