தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி,தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆஜராகி பதில் அளித்தார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், தமிழக அரசின் உயர்மட்ட கொள்கை முடிவு என்பதால் ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்கவே முடியாது எனவும் விளக்கம் அளித்தார். தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV