தண்ணீர் விநியோகத்திற்கான டெண்டர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

2018-07-17 0

கோவையில் தண்ணீர் விநியோகத்திற்கான டெண்டர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

24மணி நேர குடிநீர் வினியோகதிட்டம் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்
அனைத்து மாவட்ட இயக்குநர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நடைபெற்றது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடிநீர், தொற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மக்களிடம் நேரடியாக ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட அதிகாரிகளும் தினமும் களத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார், தமிழகத்தில் இதுவரை 49லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் 28 மாவட்டங்கள் திறந்த வெளி கழிப்பு முறை இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது தெரிவித்தார்.
கோவை மாவட்டத்து குடிநீர் வழங்கும் திட்டமானது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது ஆனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக அதனை அவர்களால் கொண்டு செல்ல முடியவில்லை என்று தெரிவித்த அவர்
மக்களுக்கு தண்ணீர் வினியோகிப்பதற்கான டெண்டர் பல்வேறு கட்டுப்பாடுகளுடந்தான் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இதில் அனைத்த அதிகாரங்களும் மாநகராட்சி வசமே உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் என்பது சிறந்த திட்டம்,
கோவை மாவட்டத்துக்கு கிடைக்கவுள்ள நன்மையை கெடுக்கும் நோக்கில் எதிர்கட்சிகள் செய்யும் சதி என்றும் இது மக்கள் விரோத செயல் என்றும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தியபின் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires