குளச்சல் முதல் கோடியக்கரை வரை உள்ள கடற்பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தொண்டி, மண்டபம், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. பலத்த காற்று வீசும் என்ற வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 20 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்களும் பலத்தகாற்றின் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV