நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடந்த மதுரை பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்ற இந்தியத் தேர்தல் ஆணையம், கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்ய எந்த ஆட்சேபனை மனுவும் வரவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து கட்சியை பதிவு செய்வது தொடர்பாக வரும் 20 ஆம் தேதி கட்சி நிர்வாகிகள் நேரில் ஆஜராக இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினமே கட்சியின் சின்னம் குறித்து மக்கள் நீதி மய்யம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற கமல், அங்கு தேர்தல் அதிகாரிகளை சந்தித்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV