மாநில செயற்குழு கூட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது

2018-07-17 0

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. அப்போது சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவாமல் இருக்க காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிச்சர்டில் தங்கவைக்கப்பட்டனர். இதனையடுத்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் அதே கூவத்தூர் விடுதியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணி, ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு, இளைநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதிய வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அதிமுக அரசு கண்டிக்கும் வகையில் கூவத்தூர் விடுதியில் கூட்டம் நடைபெற்றதால் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires