மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6 மாதத்துக்குப் பிறகு 50 அடியை தாண்டியது

2018-07-17 0

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழையால் மேட்டூர் அணைக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10.27 அடி உயர்ந்துள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 50.32 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10,026 கன அடியில் இருந்து 4,586 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 18.015 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires