சென்னை திருமங்கலத்தில் ஏஜே காலணியைச் சேர்ந்தவர் மூதாட்டி வேதவள்ளி. இவர் கடந்த 9ம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு கடந்த 15ம் தேதி தாம்பரத்திற்கு வந்து அங்கிருக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்றிரவு திருமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 50 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயிருந்தது. இதனையடுத்து திருமங்கலம் போலீசில் மூதாட்டி வேதவள்ளி புகார் செய்தார். அதனடிப்படையில் திருமங்கலம் போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV