சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநரான சசிக்குமாரின் தந்தை வெற்றிவேல், கடந்த 2011ம் ஆண்டு கோட்டூர்புரம் அடையாற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தந்தையின் மீது சசிக்குமாருக்கு அளவுக்கடந்த அன்பு இருந்ததாக தெரிகிறது. இதனால், தந்தை இறந்த சோகத்தில் இருந்து மீளாத சசிக்குமார், தந்தை இறந்த அதே அடையாற்றில், குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று 25வது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய சசிக்குமார், பிறந்த நாளிலேயே உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV