நாளை தொடங்குகிறது நாடாளுமன்றம் கூட்டத்தொடர்- வீடியோ

2018-07-17 3,500

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிப்பது, முத்தலாக் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என தெலுங்குதேசம் கட்சி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் தெலுங்குதேசம் படு தீவிரமாக இருக்கிறது.

The Monsoon session of Parliament will begin Tomorrow. The key bills listed for introduction include the Muslim Women (Protection of Rights on Marriage) Bill.